ஜே.ஆரின் பேரன் மீது மிளகாய் தூள் தாக்குதல்
முன்னாள் அரச தலைவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரன் பிரதீப் ஜெயவர்த்தன மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர் ஒருவரே தாக்குதலை மேற்கொண்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநகரசபை உறுப்பினரான பிரதீப் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
சூழல் தொடர்பான நிலையியற் குழுவின் தலைவருக்கான போட்டியில் தாக்குதலை மேற்கொண்டவரின் உறுப்பினரை, தான் தோற்கடித்த பின்னர் தன்னை பெண் உறுப்பினர் தாக்கினார் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு நான்கு வாக்குகளும் அவருக்கு ஒரு வாக்கும் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மாநகர சபை உறுப்பினர் எதனையோ என்மீது வீசி எறிந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் இரு உறுப்பினர்களும் மோசமானவர்கள் எனவும் அவர்கள் கடந்த காலங்களில் குழப்பங்களை விளைவித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
