மின்வெட்டு அறிவிப்பு - விளக்குகளின் விலையும் ஆயிரத்தை கடந்தது
price
increase
power cut
lantern
By Sumithiran
ஹட்டன் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மண்ணெண்ணெய் விளக்குகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேசத்தில் உள்ள பலர், மின்வெட்டு அறிவிக்கப்பட்டதையடுத்து ஹட்டனில் உள்ள சில வியாபாரிகள் மண்ணெண்ணெய் விளக்குகளின் விலையை கடுமையாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், நடுத்தர அளவிலான சிம்னி விளக்கு ஒன்றின் விலையை ரூ.1,000 ஆகவும், விளக்கு ஒன்றின் விலையை ரூ.1,200 ஆகவும் உயர்த்த சில வியாபாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
இந்த வியாபாரிகள் சிலர் திட்டமிட்டு மக்களை சுரண்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
