பட்டுப்பாதை திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு! இலங்கை அரசியல்வாதிகளை குறிவைக்கும் சீனக்கட்சி
சீனாவின் படுப்பாதை முயற்சியின் அடுத்த இலக்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10 ஆம் திகதி சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உரையாடலின் போதே இந்த விடயம் பேசப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி
இந்த கலந்துரையாடலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் வெளிவிவகாரச் செயலாளர் திலின பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் செயற்படுத்தப்பட்ட பட்டுப்பாதை திட்டத்தின் தசாப்த வெற்றி பற்றி பேசப்பட்டது, மேலும் அதன் அடுத்த முன்னேற்ற திட்டங்களும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
பட்டுப்பாதை திட்டம்
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தினை முதலில் அங்கீகரித்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் திகழ்வதனால் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுடன் சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் பிளவுகளைக் குறைத்து, ஒன்றாக இணைந்து புதிய திட்டங்களுக்காக செயலாற்ற இருப்பதாக இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.

இந்தியப் பெருங்கடலில் மிக முக்கியமான மூலோபாய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாகவும், பிராந்தியத்தின் முக்கிய சந்தைகளை எளிதாக அணுகுவதற்குரிய முக்கிய தளமாகவும் இலங்கை விளங்குவதால் சீனாவிற்கு இது மிகவும் முக்கியமான ஒரு நாடாகும்.
இதனாலேயே சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுக்காக இலங்கையின் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட சீன கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிதெரிகிறது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்