விண்வெளிப்பயணங்களிற்கு புதிய விண்கலங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் சீனா !
சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன் முதற்கட்டமாக இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சந்திரனிற்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் மீளப்பயன்படுத்தக்கூடிய ரொக்கெட்களை சீனா உற்பத்தி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகமானது 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் முறையே நான்கு மீட்டர் மற்றும் ஐந்து மீட்டர் விட்டம் கொண்ட மீளப்பயன்படுத்தக்கூடிய ரொக்கெட்டுகளை முதன்முறையாக விண்ணிற்கு ஏவத் திட்டமிட்டுள்ளது.
குழு ஏவுகணை
மேலும் அடுத்த ஆண்டில் (2025) சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகமானது லோங் மார்ச் 10 என அழைக்கப்படும் ஒரு புதிய, 5.0m-விட்டம் கொண்ட குழு ஏவுகணையினை உருவாக்கி குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு ஏற்ற வண்ணம் உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
இவற்றைத் தொடர்ந்து 2030ஆம் ஆண்டுக்கு முன் சந்திரனிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும் சீனா முயற்சித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விண்கலங்கள் அனைத்தும் மீளவும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுவதனால் எதிர்காலத்தில் விண்வெளிப்பயணங்களுக்கு ஏற்படும் அதிகரித்த செலவுகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |