சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய உணவுப்பொதிகள்
srilanka
china
donate
food parcel
By Sumithiran
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையுடன் இணைந்து குறைந்த வருமானம் பெறும் சுமார் 10,000 குடும்பங்களுக்கு தலா 5,000.பெறுமதியான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளை 16 இலங்கை அரசியல் கட்சிகள் மூலம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெளிநாட்டு உறவுகளின் தலைவர் கிறிஸ் பல்தசார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று தெஹிவளை – கல்கிசை மாநகர சபை வளாகத்தில் முதலாவது நிகழ்வு இடம்பெற்றது.
இந்த இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்க முன்வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து நாமல் ராஜபக்ச ட்வீட் செய்திருந்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி