சீனாவில் பாரிய தீ விபத்து : பற்றி எரியும் 42 மாடிக் கட்டிடம் (காணொளி)
China
Accident
By pavan
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சங்ஷாவில் உள்ள 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சங்ஷாவில் உள்ள மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா டெலிகொமின் வானளாவிய கட்டிடமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
கீழ்த் தளத்தில் இருந்து மேல்தளம் வரை தீ பரவி எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீ விபத்தால் பாரிய பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
❗️In #China, the skyscraper of the largest telecom operator China Telecom in #Changsha is on fire. Hundreds of people could be burned alive. pic.twitter.com/GDNC74k8Tj
— NEXTA (@nexta_tv) September 16, 2022


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 13 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்