இலங்கை - சீனா உறவு..! அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்யத் தேவையில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவ் நின்க் தெரிவித்துள்ளார்.
கடன் செலுத்துவதற்கான தவணைக் காலமாக சீனா இலங்கைக்கு இரண்டு ஆண்டு சலுகை அறிவித்திருந்தமை போதுமானதல்ல என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலாண்ட் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
சீனாவின் உதவிகள்
சீனாவின் உதவிகள் குறித்து இலங்கை திருப்தி கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை – சீன உறவுகளில் தலையீடு செய்யாது அமெரிக்கா இலங்கைக்கு உதவ வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இணைந்து தேவையான
உதவிகளை வழங்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
