ஹரிணியிடம் வாக்குமூலம்: ரணில் சந்திப்பு விவகாரம் குறித்து சிஐடி விசாரணை!
பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்ப்பதற்காக தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக பரவிய செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பிரதமர் அலுவலகம் பதிவு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, சிஐடியினர் நேற்று (27) மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரமவிடம் இது குறித்து அறிக்கை அளித்துள்ளனர்.
வைத்தியசாலையின் கமரா
இந்த நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவரது பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மற்றும் அவரது பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த பிறகு, தேவைப்பட்டால் தேசிய வைத்தியசாலையின் கமரா காட்சிகளையும் ஆய்வு செய்ய அனுமதிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

