இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தனியார் கடன் வழங்குநர்கள்...!
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படுவதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை்கான தனியார் கடன் வழங்குநர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
நல்லெண்ண அடிப்படையில் அரசாங்கம் தனியார் கடன் வழங்குநர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாவிட்டால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு கடன் வழங்குநர்கள்
சீனா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் அரசாங்கம் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இவ்வாறான பேச்சுவார்த்தைகள் தங்களுடன் மேற்கொள்ளப்படவில்லை என தனியார் கடன் வழங்குநர்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனாவை மாத்திரம் இலங்கை நம்பியிருக்க கூடாதெனவும் தனியார் கடன் வழங்குநர்களின் எண்ணிக்கை மிகவும் பெரியது என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம்
இந்த நிலையில், இலங்கை தங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நிதியுதவி கிடைக்கப் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அரசாங்கம் தங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளச் செய்வதற்கான ஒரே வழி இது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிருப்தி
இலங்கையின் அணுகுமுறை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தனியார் கடன் வழங்குநர்கள், இதன் காரணமாக சர்வதேச மூலதன சந்தையில் இலங்கை குறித்த நம்பிக்கை சிதைவடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் பல மாற்றங்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டாலும், தனியார் கடன் வழங்குநர்களை அவர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |