அமெரிக்காவை பலி தீர்த்தது சீனா: திடீரென வெளியான அறிவிப்பு
அனைத்து அமெரிக்க (US) பொருட்களின் இறக்குமதிக்கும் ஏப்ரல் 10 முதல் 34% வரி விதிக்கப்போவதாக சீனா (China) அறிவித்துள்ளது.
இந்த வாரம் ட்ரம்ப் உத்தரவிட்ட சீன ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க பரஸ்பர வரியான 34 வீதத்திற்கு பதிலடியாக சீனாவும் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
புதிய வர்த்தக தடைகள்
கணினி சிப்கள் மற்றும் மின்சார வாகன மின்கலன்கள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்களான அரிய மண் தாது மீது கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப்படும் என்றும் பெய்ஜிங்கில் உள்ள வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, வர்த்தக தடைகள் அல்லது ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் 27 அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ப்பதாகவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த வரி பிரச்சினை தொடர்பில் உலக வர்த்தக அமைப்பில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக சீனா கூறியுள்ளது.
சீனாவின் முடிவு
இந்த நிலையில், அமெரிக்காவின் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்த மற்றும் தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகள் மீது புதிய வரி வீதங்களை அறிவித்தார்.
ட்ரம்பின் குறித்த நடவடிக்கைக்கு, பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சில நாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவுள்ளதாக அறிவித்துள்ளன.
இவ்வாறான பின்னணியில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாக கனடா அறிவித்த சில மணி நேரங்களில் சீனாவும் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்