இலங்கையில் சீனா நடத்திய இரகசிய கருத்துக்கணிப்பு - பீஜிங்கிற்கு சென்ற இரகசிய அறிக்கை
சீன அரசாங்கக் குழுவொன்று இலங்கை வந்துள்ளதுடன், முழுத் தீவுகளையும் உள்ளடக்கி இரகசியமான முறையில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தக் குழுவினர், இலங்கை தொடர்பில் சீன அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள், நாட்டில் இதுவரையில் சீனா மேற்கொண்டுள்ள ராஜபக்சாக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்கணிப்பு மூலம் தகவல்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக இலங்கையில் சீனா எத்தகைய தவறுகளை செய்துள்ளது, அதனை எவ்வாறு திருத்திக் கொள்ள முடியும் என்பது தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் பின்னர் பீஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதனை ஆய்வு செய்த சீன அரசாங்கம் ராஜபக்சாக்களுக்கு சாதகமாக திட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
