சீனாவுக்கு ஞானம் உதயமாகி இந்தியாவுடன் இணைந்தால் ஆசிய சகாப்தம்!
சீனாவும், இந்தியாவும் இணைந்தால் ஆசிய சகாப்தம் நடக்கும். ஆனால் அதேபோல் இரு நாடுகளும் இணைய முடியாவிட்டால் அது நடப்பது கடினமாகும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவும், சீனாவும் கைகோர்ப்பது சொந்த நலனுக்கானது என்றும், சீன தரப்பில் ஞானம் உதயமாகும் என்று தாங்கள் மிகவும் நம்புவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், சீனாவும் கைகோர்ப்பது சொந்த நலனுக்கானது

தாய்லாந்தின் சுலலொங்கொன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 'இந்து - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் நோக்கு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய பின்னர், எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“எல்லையில் பீஜிங்கின் செயற்பாட்டுக்குப் பின்னர், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு 'மிகவும் கடினமான கட்டத்தை' கடந்து வருகின்றது.
இந்தியாவும், சீனாவும் இணைய வேண்டுமானால் இலங்கை மட்டும் அவசியமில்லை

இவ்வாறான நிலையில், இரு அண்டை நாடுகளும் கைகோர்க்க முடியாவிட்டால் ஆசிய சகாப்தம் நடக்காது” என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவும், சீனாவும் இணைய வேண்டுமானால், அதற்கு இலங்கை மட்டும் அவசியமில்லை என்றும், செயற்பட வேண்டிய பல காரணங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.