வெளிநாடுகளில் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை: சீன அதிபரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை
சீனா இதுவரை வெளிநாட்டு நிலங்கள் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என அந்நாட்டு அதிபர் ஜின்பிங் தெரிவித்த விடயம் உலகநாடுகள் மத்தியில் சர்ச்சையில் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய - பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு அமெரிக்காவில் நேற்று முடிவடைந்தது.
இதில் பங்கேற்க அமெரிக்கா சென்ற சீன அதிபர்ஜின்பிங், சான் பிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “சீனாவில் மக்கள் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து 70 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக எந்த நாட்டுடனும் எந்தவிதமான மோதலையோ, போரையோ தூண்டவில்லை.
சீனா இந்தியா கடும் மோதல்
இன்னும் சொல்ல போனால் இதுவரை ஒரு அங்குலம் கூட எந்தவொரு வெளிநாட்டு நிலத்தையும் எங்கள் நாடு ஆக்கிரமித்தது இல்லை,” என்றார்.
கடந்த 2020ல் கொரோனா காலத்தில் இந்திய எல்லை அருகே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இரு நாட்டு எல்லைகளிலும் இராணுவம் குவிக்கப்பட்டது. நிலைமை இவ்வாறு இருக்க இதற்கு நேர்மறையான கருத்துகளை சீன அதிபர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியா மட்டுமின்றி ஜப்பான், தைவான் நாடுகளிலும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் எந்த வெளிநாட்டு நிலங்களையும் ஆக்கிரமிக்கவில்லை என சீனா கூறியுள்ளமை உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.