கட்டுநாயக்காவில் கைதான சீன பிரஜை தொடர்பில் வெளியான பகீர் தகவல்
Lankasri
China
By Kiruththikan
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அண்மையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜையை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
தன்னை சீனாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கோரி, கைதான சீன பிரஜையினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு
இதன் போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, குறித்த மனுவை மீள பெறுவதாக சீன பிரஜை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி