சீனாவில் முன்பள்ளியில் கத்திகுத்து துடிதுடித்து பலியான பிஞ்சுகள்
சீனாவின் தென்கிழக்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள முன்பள்ளியில் திங்கள்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
லியான்ஜியாங்கில் இருந்து வு என்ற குடும்பப்பெயர் கொண்ட 25 வயது இளைஞன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காலைவேளை சம்பவம்

இன்று காலை 7.40 மணியளவில் ஹெங்ஷான் டவுன்ஷிப்பின் பகுதியில் கோடை வகுப்புகளுக்குப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இறக்கிவிட்டுச் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு ஆசிரியர், இரண்டு பெற்றோர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் பலியானதாக அடையாளம் காணப்பட்டனர்.
கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி உள்ளூர் அதிகாரிகளுக்கு சீனக் கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 53 நிமிடங்கள் முன்