இயன்றளவு உதவுகிறேன்..! சீன அதிபர் ரணிலுக்கு கடிதம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது இயலுமைக்கு உட்பட்ட சிறந்த ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமையடுத்து அனுப்பிய வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமையின் கீழ் இலங்கை நெருக்கடியில் இருந்து மீளும் என தான் நம்புவதாகவும் சீன அதிபர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சின அரச ஊடகம் வெளியிட்ட செய்தி
இதேவேளை, இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தனது ஆதரவை வெளியிட்டுள்ளதாக சீனாவின் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையால் பொருளாதார சமூக மீட்சியை நோக்கி செல்லமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீன அதிபர், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை மக்களிற்கும் அவர்களின் முயற்சிகளிற்கும் ஆதரவு வழங்க முடியும் என தெரிவித்ததாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
