இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் சீனா: குற்றம்சாட்டும் மைத்திரி
இலங்கைக்கு சீனா அழுத்தங்களை கொடுப்பதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டுமன சர்வதேச ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தற்போது நாடு புவிசார் அரசியல் நிலைத்தன்மையை அடைந்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் போட்டி
இந்தியாவின் தென்கிழக்கு கரையில் உள்ள இலங்கை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பெரும் அரசியல் போட்டியில் சமீப காலங்களில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஆழமான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை அடிப்படையாக கொண்டு தனது அமெரிக்காவுக்கான பயணம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை தற்போதைய நிலையிலிருந்து காப்பாற்றுமாறும் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை கேட்டுக் கொள்வதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |