பிரிட்டனில் சீனாவின் இரகசிய காவல்நிலையங்கள் - பிரிட்டன் அரசின் அதிரடி உத்தரவு!
United Kingdom
China
By Pakirathan
பிரித்தானிய மண்ணில் இருக்கும் இரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரித்தானிய அரசு கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகேன்தட் எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார்.
சீனத் தூதரகம் ஊடாக பிரித்தானியாவில் சீனா காவல்நிலையங்களை நடத்துவதை ஏற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பதில்
எந்த வடிவிலும் சீனா தனது காவல் நிலையத்தை பிரித்தானியாவில் இயக்கக்கூடாது என கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த அத்தனை நிலையங்களும் மூடப்பட்டு விட்டதாகவும், பிரித்தானிய சட்டத்திற்குட்பட்டு செயல்படுவோம் எனவும் சீனத்தூதரகம் சார்பில் பதில் வழங்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்