இலங்கையை வைத்து சீனா கொடுத்துள்ள அதிர்ச்சி - திக்குமுக்காடும் இந்தியா?

srilanka india america china port city
By S P Thas Jun 08, 2021 06:04 AM GMT
Report

இலங்கை மெல்ல சீனாவின் கடன்பொறியில் சிக்கி அதிலிருந்து தப்பிக்க அதன் கூட்டாளியாக மாறுகிறதா? என்று இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக இந்தியப் பெருங்கடல் மூலோபாய ஆய்வு மையம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பில் Indian Ocean Strategic Study Center, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் புவிசார் அரசியல் மாற்றங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குப் பிறகு கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் மூலம் இலங்கை, இந்தியப் பெருங்கடலில் ஆர்வம் கொண்ட உலக நாடுகளுக்கு மற்றுமொரு அரசியல் தலைவலியைக் கொடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டம் கடந்த மே 20 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியிருப்பது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்தச் சட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது என சிவில் சமூக அமைப்புகள். ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இலங்கை உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் அல்லது பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. நாடாளுமன்ற பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக கோட்டாபய அரசு உச்சநீதிமன்றம் முன்மொழிந்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டது.

கொழும்பு துறைமுக நகர திட்டம் என்றால் என்ன?

கொழும்புக்கு அருகே கடல் பரப்பில் 2 சதுர கிலோமீட்டர் நிலத்தை கைப்பற்றி சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்குவதே கொழும்பு துறைமுக நகரம். இந்தத் திட்டம் 269 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உருவாக்கப்படுகிறது, அதில் 116 ஹெக்டேயர் நிலம் முழுக்க சீனாவின் பிரத்தியேக கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்தத் திட்டம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 2041 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட இருக்கிறது. China Harbour Engineering Company, China Merchants Port Holdings Company என்கிற சீன அரசுக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்கின்றன.

இதே இரண்டு நிறுவனங்கள் தான் அம்பாந்தோட்டை துறைமுகத்திலும் முதலீடு செய்துள்ளன. இலங்கையில் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தால் நிறைவேற்றப்படும் மிகப்பெரிய தனியார் துறை வளர்ச்சி திட்டம் இதுவே.

China Merchants Port Holdings Company தலைமையிலான சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் உள்ள சர்வதேச கொள்கலன் முனையத்தை 35 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் எடுத்துள்ளது. இந்நிறுவனம் 500 பில்லியன் அமெரிக்க டொலர் மூதலீடு செய்யும். அதற்கு கைமாறாக கொழும்பு சர்வதேச முனையத்தின் 85% பங்குகள் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

தெற்காசியாவின் தலைசிறந்த ஆழ்கடல் முனையம் இது தான். இந்தத் திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் கடந்த 2014ல் தொடங்கி 2019-ல் நிறைவுற்றது. டிசம்பர் 2019-ல் இந்த இடம் இலங்கைக்குச் சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ரணில் விக்ரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனாவும் ஆதரவாக உள்ளனர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தால் மேலும் பல புவிசார் அரசியல் மாற்றங்கள் நிகழ இருப்பதை உறுதி செய்கிறது.

கவனிக்கத்தகுந்த விஷயங்கள் என்னென்ன?

கொழும்வு துறைமுக நகரம் வெளிநாட்டு முதலீடுகளோடு கொழும்பு சர்வதேச வர்த்தக நகரமாக உருவாக உள்ளது. இந்தத் திட்டத்தின் ஐந்து முக்கியமான அம்சங்கள் வங்கி மற்றும் வர்த்தகம், ஒய்வு மற்றும் பொழுதுபோக்கு, ஹோட்டல்கள், சூதாட்ட நிலையங்கள் மற்றும் பிரத்தியேக துறைமுகங்கள் ஆகும்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்திற்கு வரி, சுங்கம், பந்தயம் மற்றும் சூதாட்ட வரி, ஊழியர்கள் பணிநீக்கம், பொழுதுபோக்கு வரி, அந்நிய செலாவணி மற்றும் சுதாட்ட வணிகம் உள்ளிட்டவற்றில் பிரத்திகேய அதிகாரம் உண்டு.

கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிக்க நியமிக்கப்படும் ஏழு நபர் ஆணையம் வரி விதிப்பதிலிருந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவதுவரை சகல அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும். இந்த ஆணையத்தின் ஏழு உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டு. இதில் ஏழு உறுப்பினர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர்.

கொழும்பு துறைமுக நகரத்திற்கு தனி பொருளாதார, வர்த்தக மற்றும் குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்படும். இலங்கையின் சட்டங்கள் அங்கு பொருந்தாது. இலங்கை நாடாளுமன்றத்தின் இறையாண்மைக்கு அப்பாற்பட்டு இந்த நகரம் இயங்கும். இந்தச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் இலங்கையின் சட்டங்களுக்கு எதிராக இருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

அரசியலமைப்பு வல்லுநர்கள் இந்த சட்டத்தில் உள்ள 75 பிரிவுகளில் 26 பிரிவுகள் இலங்கை அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இலங்கை நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரம் மீறப்பட்டுள்ளது.

இலங்கை அரசு தற்போதுள்ள கொரோனா சூழலை பயன்படுத்தி முறையான பொது விவாதம் இல்லாமல் நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்க நேரம் வழங்காமல் இந்தச் சட்டத்தை திணித்துள்ளது. இதன் 51% பங்குகள் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் கொழும்பு துறைமுக நகரத்திற்கு வழங்கப்பட்டிருப்பதை வைத்தே இந்தத் திட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானித்துவிடலாம்.

நிதி, பொருளாதார மற்றும் தொழிலாளர்கள் சிக்கல்கள் இனி சர்வதேச சட்டங்களின் கீழ் மட்டுமே முடிவு செய்யப்படும். அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தை விட இங்கு சீனர்களின் பங்களிப்பு பல மடங்கு அதிகரிக்கும்.

கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார மண்டலத்தில் கறுப்பு பணம் முதலீடுகளாக பயன்படுத்தப்படுவதும், பணமோசடிகள் நிகழக்கூடும் என்பதற்கான போதிய காரணங்கள் மிக வெளிப்படையாக உள்ளன.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்திற்கு தனியாக குற்றவியல் சட்டங்களை உருவாக்கிக் கொள்ளும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. சீன முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் சீனர்களுக்கு இங்கு பல்வேறு சலுகைகள் கிடைக்க உள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தனித்தனி விதிகள் உள்ளன. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் சட்டங்களுக்கு கட்டுப்படாது.

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவின் இன்னொரு காலனியாக மாற்றும் இந்தத் திட்டம் எப்படி இறையாண்மை உள்ளதாக அரசியலமைப்பின் கீழ் ஏற்கக்கூடிய ஒன்றாக இருக்கும்?

இலங்கை மெல்ல சீனாவின் கடன்பொறியில் சிக்கி அதிலிருந்து தப்பிக்க அதன் கூட்டாளியாக மாறுகிறதா?

அம்பாந்தோட்டை துறைமுகத்தைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரம் இலங்கையில் சீனாவின் மிக முக்கியமான திட்டம்.

அம்பாந்தோட்டையும் கொழும்பும் எந்தவொரு நாடும் தவிர்க்க இயலாத கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்கள். 9,500 கோடி ரூபாய் சீன முதலீட்டில் கட்டப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இலங்கை தன்னுடைய கடன்களை செலுத்தத் தவறியதால் கடந்த 2017-ம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகம் 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிடம் கடன் வாங்கி கட்டப்பட்டு காலியாக இருக்கும் ராஜபக்ச விமான நிலையத்தின் நிலையை இங்கு கவனிப்பது பொருத்தமாக இருக்கும்.

அம்பாந்தோட்டை ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தற்போது கொழும்பு துறைமுக நகரமும் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது.

சீனாவை மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் சீனாவின் பெருங்கனவான பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு அங்கமாகவே கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளது. இந்தத் திட்டம் ஜீ ஜின்பிங்கின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு அங்கமாக செயல்படும் மற்றும் சீனா இதனை தன்னுடைய கடல்கடந்த பிராந்தியமாகவே பயன்படுத்திக் கொள்ளும்.

அம்பாந்தோட்டை உலகின் மிகவும் பரபரப்பான கடல் வழித்தடத்திற்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளது. இலங்கை சீனாவுக்கு 18 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் கடன் மீதியை வைத்துள்ள நிலையில், இலங்கையால் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த இயலுமா இல்லை இந்தத் திட்டமும் அம்பாந்தோட்டை போல ஆகிவிடுமா என்கிற பிரதான கேள்வி தான் நம்முன் எழுகிறது.

சீனா உடன் மிகப்பெரிய திட்டங்களில் கையெழுத்திட்டு பின்னர் அந்த கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமல் தான் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தை இழந்தது. சீனா இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், மின் நிலையங்கள் எனப் பலவற்றில் முதலீடு செய்துள்ளது.

இலங்கையில் கட்டமைப்புகளில் சீனா செய்துள்ள முதலீடுகள் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் 14% என கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கையில் செய்யப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீட்டில் சீனாவின் பங்களிப்பு 35% ஆகும்.

சீனாவுக்கு கிடைக்கும் புவிசார் பலன்களும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளும் என்னென்ன?

அம்பாந்தோட்டையும் கொழும்பு திட்டமும் சீனாவின் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு திட்டங்களாக அமைந்துள்ளன. அம்பாந்தோட்டையும் கொழும்பு துறைமுக நகரமும் தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான இரட்டை இயந்திரங்கள் என்பதை சீனா 2021-ம் தொடக்கத்திலே கண்டறிந்திருந்தது.

சீனாவும் இலங்கையும் இணைந்து பணியாற்றி மேற்குலக நாடுகளின் அழுத்தத்திற்கு பணியாமல் வளரும் நாடுகளின் சட்டப்பூர்வ உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க வேண்டும். சீனாவின் பார்வையில் அம்பாந்தோட்டையும் கொழும்பு நகரமும் பட்டுப்பாதை திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் தன்னுடைய கடல்சார் கொள்கையை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான திட்டங்களாக உள்ளன என்று சீனா வலுவாக நம்புகிறது.

இந்தியப் பெருங்கடலில் முக்கியமான கடல்வழித் தடங்களைக் கைப்பற்றுவது சீனாவுக்கு முக்கியமாக அமைகிறது. மாற்று கடல்வழித் தடத்திற்கான சீனாவின் தேடல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகிலேயே அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது.

2020ல் மட்டும் சீனா 542 மில்லியன் டன் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இதில் 53% மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து வாங்கி இந்தியப் பெருங்கடல் வழியாகத் தான் சீனாவுக்கு கொண்டு வரப்படுகிறது. சீனாவின் எண்ணெய் இறக்குமதி கடல்வழித் தடம் மூலமாகத் தான் சாத்தியப்படுவதால் தன்னுடைய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை தற்காத்துக் கொள்ள இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளுடன் நட்புறவு கொள்ள வேண்டிய தேவை சீனாவுக்கு எழுந்துள்ளது.

கடல்களை கட்டுப்படுத்தவும் கடல்சார் உரிமைகளை பாதுகாக்கவும் சமீப காலங்களில் சீனா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சீனாவின் இந்த கடல்சார் கொள்கையில் இரண்டு தனித்துவமான அணுகுமுறைகள் உள்ளன.

பாகிஸ்தான், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் செய்யப்படுவதைப் போல கடன்பொறிகளை அதிகரித்து வர்த்தகம், முதலீடு, துறைமுக வளர்ச்சி என்கிற பெயரில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சீனாவின் கண்காணிப்பு தளங்களை அமைப்பது. நீண்ட கால நோக்கில் அம்பாந்தோட்டையும், கொழும்பு துறைமுக நகரமும் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உருவாக்க முயற்சிக்கும் பாதுகாப்பு கட்டமைப்புக்கு எதிர்வினையாக உருவாக்கப்படுவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் நாற்பது ஆண்டுகளாக அந்நாடு முன்னெடுத்த தளராத முயற்சிகளின் பலனாகவே விளைகிறது. சீனா தன்னுடைய நீண்ட கால கடல்சார் நலன் மற்றும் புவிசார் நோக்கங்களை நிறைவேற்ற இலங்கை போன்ற இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளுடன் தன்னுடைய பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

இறுதியான கருத்து:

சர்வதேச விதிகளை பின்பற்றாத ஒரு நாட்டை பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். 1978-ம் ஆண்டின் Greater Colombo Economic Commission Law, 1980-ம் ஆண்டின் Greater Economic Commission (Amendment) Act மற்றும் 1983-ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொழும்பு இனக்கலவரத்தின் வரலாறையும் நினைவு கூர்வது சரியாக இருக்கும்.

1980களில் ஜெயவர்த்தன செய்ததைப் போல இந்த முறையும் அரசாங்கத்தின் தோல்வியையும் அதிகரித்து வரும் கோட்டாபய ராஜபக்ச அரசின் சர்வாதிகாரத்தையும் மறைக்க தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரு திசை திருப்பும் கருவியாக பயன்படுத்தப்பட மாட்டார்கள் என நம்புகிறோம்.

இலங்கை அரசு 2007 - 2009 காலகட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம், இலங்கை சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துவதை தொடர்ந்து கடைபிடிக்க மறுத்து வருகிறது.

இலங்கை சீனாவின் போர்வைக்குள் அகப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்

ராஜபக்சவுக்கு சீன தலைமையுடன் உள்ள நெருக்கம் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை தொடர்பான சர்வதேச நெருக்கடி இரண்டிலிருந்தும் சீனா தன்னை காப்பாற்றும் என்கிற நம்பிக்கை தான். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இதர மேற்குலக நாடுகள் இலங்கையில் அதிகரித்து வரும் சீனா ஆதிக்கத்தையும் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் புவிசார் அரசியல் மாற்றங்களையும் மெல்ல உணரத் தொடங்கியிருக்கின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.    

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026