சீன இராணுவத்தின் உயர் நிலை ஜெனரல் ஒருவருக்கு பேரிடி!
ஒழுக்கம் மற்றும் சட்ட மீறல்கள்தொடர்பாக சீன இராணுவத்தின் உயர் நிலை ஜெனரல் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு சனிக்கிழமை அறிவித்துள்ளது.
சீன இராணுவத்தின் மிகச் சக்திவாய்ந்த அமைப்பான மத்திய இராணுவ ஆணைக்குழுவின் (Central Military Commission) இரண்டு துணைத் தலைவர்களில் மூத்தவரான ஜாங் யௌஷியா (Zhang Youxia) இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சமீபத்திய உயரதிகாரி ஆவார்.
நோக்கம்
இது, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் இராணுவ அதிகாரிகள் மீதான சுத்திகரிப்பு (purge) நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

Image Credit: Bloomberg.com
இந்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள், இராணுவத்தை சீரமைப்பதற்கும், அதே நேரத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு முழுமையான விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்குமானவை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஊழல் ஒழிப்பு இயக்கம்
இவ்வாறானதொரு பின்னிணில், ஷி ஜின்பிங், மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் செயல்படுகிறார்.

Image Credit: State Council Information Office
இந்த நடவடிக்கைகள், 2012ஆம் ஆண்டு சி ஜின்பிங் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
சம்பந்தப்பட்ட இயக்கத்தின் கீழ், இதுவரை 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |