இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் மற்றுமொரு முதலீடு!

Beulah
in பொருளாதாரம்Report this article
ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பது முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஆழ்கடல் துறைமுகமாகும்.
இதுவரையில், சீன முதலீடான கொழும்பு போர்ட் சிட்டி, இலங்கையில் மிகப்பெரிய நேரடி முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது.
அவ்வகையில், ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக, சீனாவின் சினோபெக் நிறுவனம், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மிகப்பெரிய நேரடி முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினோபெக் நிறுவனம்
இருப்பினும், குறித்த துறைமுகம் 2017ஆம் ஆண்டில் சீன அரசுக்கு சொந்தமான 'சீனா மெர்ச்சன்ட்ஸ்' நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற சீன விஜயத்தின் போது, அதிபர் ரணில் விக்கிரமசிங்க, சினோபெக் குழுமத்தின் தலைவர் மா யோங்ஷெங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்கு சீனாவின் சினோபெக் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினோபெக் நிறுவனம் ஏற்கனவே இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையிலும் பிரவேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
