சீனக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை அரசு! சீனா அதிருப்தி
இலங்கையின் கடற்பரப்பில் சீனக்கப்பல்கள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மற்றொரு நாட்டின் அழுத்தம் காரணமாக சிறிலங்கா அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டமை கவலையளிப்பதாக சீனா தெரிவித்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இலங்கையின் கடற்பரப்பில் வேறு நாடுகளின் கப்பல்கள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான 12 மாத தற்காலிக தடையை சிறிலங்கா அரசாங்கம் விதித்திருந்தது.
சீன ஆராய்ச்சிக் கப்பல்
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்தன் பின்னர், சிறிலங்கா அரசாங்கம் குறித்த அறிவிப்பை மேற்கொண்டது.
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3 (Xiang Yang Hong 3) இலங்கை கடற்பரப்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தொடர்பான கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த தடை தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
சீனா அதிருப்தி
இலங்கையால் விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, சியாங் யாங் ஹாங் 3 எனும் கப்பல் அதன் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மாலைதீவில் மேற்கொண்டதன் பின்னர் நேற்றைய தினம் மாலைதீவிலிருந்து வெளியேறியிருந்தது.
இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சீனா அதிருப்தியடைந்துள்ளதாகவும், மற்றொரு நாட்டின் அழுத்தம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் கடற்பரப்பில் வேறு நாடுகளின் கப்பல்கள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்தை தொடர்பில், இந்தியா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |