சீனா இலங்கைக்கு செய்யவுள்ள மற்றுமொரு உதவி!
China
By pavan
சீனாவில் இருந்து இலங்கைக்கு 10,000 தொடருந்து தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ், இந்த தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அடுத்த மாத இறுதியில் குறித்த தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எனவும் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
உடன்படிக்கை
அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த சீனாவின் சர்வதேச உதவிகளுக்கான நிறுவன அதிகாரியுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இந்த வசதியும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி