சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு - சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Parliament of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lanka
China
By Kalaimathy
நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களில் ஒன்றான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் பின்னரான பேச்சுவார்த்தையில் அடுத்த கட்ட நடவடிக்கையை சிறிலங்கா மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலத்திலிருந்து சீனா எமக்கு ஆதரவளித்து வருவதாகவும் இந்த இக்கட்டான நேரத்திலும் அவ்வாறே செயற்படுவார்கள் எனவும் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி