சற்று முன்னர் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வு
இன்றைய (22.07.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 06.00 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 5.00 வரை விசேட பெரும்பன்மையுடன் நிறைவேற்றப்படவுள்ள வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு, வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடும், வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடும் இடம்பெறவுள்ளது.
5.00 முதல் 6.00 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணை ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
