மகனுக்காக நாடாளுமன்றில் அழுது புலம்பிய ஜகத் விதான
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் தனது மகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை அசாதாரண செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான (Jagath Vithana) தெரிவித்துள்ளார்.
இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் கண்ணீர் மல்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், ”ரோஹித அபேகுணவர்த்தன (Rohitha Abeygunawardena) மகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட அதி சொகுசு வாகனம் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டது என காவல்துறையினரின் விசாரணையில் உறுதியானது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
இதனையடுத்து மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகனின் இரு குழந்தைகளும் தமது தந்தை எங்கே என்று என்னிடம் கேட்கின்றார்கள்.
இந்த வாகனம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு தனியார் வங்கியில் வாகனத்துக்கு கடனும் வழங்கப்பட்டுள்ளதை நம்பியே கொள்வனவு செய்தோம். எனக்கு சாதாரண தீர்ப்பு வழங்குங்கள்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
