இலங்கையை மீட்க முழு முனைப்புடன் சீனா : இலங்கைக்கான சீன தூதுவர் உறுதி
இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டு நிலையான பொருளாதார மீட்சியை நோக்கி பிரவேசிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
சீனாவினால் முன்னெடுக்கப்படும் அதிகவேக அபிவிருத்தி பயணத்துக்கு இலங்கை உட்பட சகல நாடுகளையும் அன்புடன் அழைக்கிறோம்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் யோசனைக்கு அமைய 'ஒரு மண்டலம் - ஒரு பாதை' அபிவிருத்தி செயற்திட்டத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் என்ற அடிப்படையில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகிய பிரதான அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுநிலை வலுப்பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பல தசாப்த காலமாக சிறந்த நட்புறவு காணப்படுகிறது என்றும்.
அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை மக்களிடம் சீனா நட்புறவுடன் செயற்படுகிறது என்றும் சீனா இலங்கையில் வெளிப்படைத்தன்மையுடன், ஸ்திரமான நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)