ஊடுருவிய சீனாவின் 60 போர் விமானங்கள் - உருவாகியுள்ள பதற்றம்
சீனாவின் 60 போர் விமானங்கள் தாய்வானில் ஊடுருவும் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
1949இல் நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தாய்வானும் பிரிந்தன. ஆனால், தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது.
அதுமாத்திரமன்றி, அவசியம் ஏற்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. இந்த நிலையில், தாய்வானை அச்சுறுத்தும் வகையில் சீன போர் விமானங்கள் அடிக்கடி தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் ஊடுருவி வருகின்றன.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக 60-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் தங்களின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தாக தாய்வான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,