சீனாவின் பெல்ட் ரோடு மாநாடு: 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு(படங்கள்)
சீனாவின் 03வது பெல்ட் ரோடு சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் ஆரம்பமானது.
குறித்த மாநாடானது பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் இன்று (18) சுமார் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் சுமார் 130 நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டதுடன், மாநாட்டில் கலந்துகொண்ட அரச தலைவர்கள் இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளனர்.
குழு புகைப்படம்
மேலும், சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அரச தலைவர்களும் சீன அதிபருடன் குழு புகைப்படத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கசகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது ஆகியோர் இம் மாநாட்டில் பங்கேற்றனர்.