திடீரென சஜித்தை சந்தித்த சீன தூதுவர்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைக்கு மத்தியிலும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென் ஹொங்கிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தமான தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிப்படைத் தன்மையுடன் நாட்டை நிர்வகித்தல், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகளை ஒழிப்பது என்பனவே தனது நிர்வாகத்தில் முதன்மையானதாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இதற்கு தூதுவர் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் கலந்துகொண்டார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
