இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்குள் புகுந்துள்ள சீன இராணுவம்
பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் குழு ஒன்று அண்மையில் மாலைதீவு, இலங்கை மற்றும் நேபாளத்துக்குச் சென்றுள்ளதாக பீய்ஜிங் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பீய்ஜிங் தெற்காசியாவில் அதன் மூலோபாய போட்டியாளரான இந்தியாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கான உந்துதலில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க முயன்று வருகிறது.
இராணுவ உதவி
கடந்த வாரம், மாலைதீவுகள் சீனாவுடன் ஒரு "இராணுவ உதவி" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதேவேளை, மார்ச் 4 முதல் 13 ஆகிய திகதிகள் வரை இலங்கை சீனா மற்றும் நேபாளத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தின்போது இராணுவத் தூதுக்குழு மாலைதீவில் சீன சார்பு அதிபர் மொஹமட் முய்சுவை சந்தித்ததை பீய்ஜிங் நேற்றையதினம் உறுதிப்படுத்தியுள்ளது.
நெருங்கிய உறவு
அத்துடன், குறித்த மூன்று நாடுகளிலும், "இராணுவ உறவுகள் மற்றும் பொதுவான அக்கறையின் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை சீனக்குழுவினர் பரிமாறிக் கொண்டனர்" என்று சீன இராணுவம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பீய்ஜிங் நேபாளத்துடனும் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |