சீன கரிம உர கப்பல் தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கைக்கு சீன கரிம உரத்தை இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் உள்ளூர் முகவரகத்தின் பணிப்பாளர் எனது உறவினர் என்பது உண்மைதான், ஆனால் தனக்கும் அதன் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லை என பிரதமரின் செயலாளர் காமினி செனரத் (Gamini Sedara Senarath.)தெரிவித்துள்ளார்.
வணிகம் செய்வது தொடர்பில் நிறுவனத்தில் தலையிடவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் தலையீடு அல்லது செல்வாக்கு செலுத்தியதற்கான ஆதாரங்கள் அல்லது உண்மைகள் யாரிடமாவது இருந்தால், முறையாக முறைப்பாட்டை பதிவு செய்ய வேண்டும் மற்றும் ஏதேனும் விசாரணை நிறுவனத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.
அத்தகைய விசாரணைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சேதன உர இறக்குமதி தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமரின் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.