இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன கடற்படை பயிற்சிக் கப்பல்
சீன (China) கடற்படை பயிற்சிக் கப்பலான PLANS Po Lang, அதன் மிட்ஷிப்மேன்களின் கடலுக்குச் செல்லும் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு (Sri Lanka) விஜயம் செய்யவுள்ளது.
இதனடிப்படையில், ஒகஸ்ட் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் பிற்பகுதிக்கு இடையில் இந்த விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் ஜாங் சியாவோங்கின் (Colonel Zhang Xiaolong) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
பகிரப்பட்ட எதிர்காலம்
இந்தநிலையில், வியட்நாம் (Vietnam), இந்தோனேசியா (Indonesia), சிங்கப்பூர் (Singapore) மற்றும் ஹாங்காங்கில் (Hong Kong) தொழில்நுட்ப நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய பணி மற்றும் மிட்ஷிப்மேன்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதை இந்த பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பயணமானது, சீன PLA கடற்படை மற்றும் இலக்கு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த முயல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மூத்த கர்னல் ஜாங், இந்த முன்முயற்சியானது பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய கடல்சார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |