சீன, ரஷ்ய சுற்றுலா பயணிகளால் ஒரு பிரயோசனமும் இல்லை - ஹோட்டல் உரிமையாளர்கள் போர்க்கொடி
இலங்கைக்கு ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்தாலும், அவர்கள் மிகக் குறைந்த பணத்தையே செலவிடுவதாக சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க அரசாங்கம் தலையிட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சுமித் உபேசிறி தெரிவித்துள்ளார்.
நிரம்பி வழியும் ஹோட்டல்கள்
ஹோட்டல்கள் தற்போது ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன, ஆனால் அவர்கள் மிகக் குறைந்த பணத்தை செலவிடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரமாட்டார்கள் என்றும் ரஷ்ய சுற்றுலா பயணிகள் கடற்கரையில் இருந்தால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு கூட வரமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள்
அதன் காரணமாக மேற்கத்திய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
