சீன கப்பல் விவகாரம் - இலங்கைக்கு ஏற்பட்ட அவமானம் - முன்னாள் அதிபர் குற்றச்சாட்டு
இலங்கைக்கு ஏற்பட்ட அவமானம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு சீன கப்பல் வருவது தொடர்பான கோரிக்கை ஜூன் 28 ஆம் திகதி விடுக்கப்பட்ட நிலையில் ஜூலை 12 ஆம் திகதி அதற்கு அனுமதி வழங்கப்பட்டது என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
கப்பலின் பயணம் - அமைச்சர் அறிந்திருக்கவில்லையா
எனினும் ஜூலை 14 அன்று வெளிவிவகார அமைச்சினால் கப்பல் பயணதிற்கான அனுமதி அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கப்பலின் பயணம் குறித்து அமைச்சர் அறிந்திருக்கவில்லையா என்றும் அவர் கேள்வியெழுப்பி உள்ளார்.
ஓகஸ்ட் 8 ஆம் திகதி கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. கப்பல் வருவதற்கு மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் கப்பலுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கப்பல் ஊழியர்களுக்கான உணவுத் தேவை
சீனக் கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் போது, கப்பலில் உள்ள ஊழியர்களுக்கான உணவுத் தேவை குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
ஏனைய நாடுகளின் கப்பல்களில் செல்வாக்கு செலுத்தி இலங்கை அதிகாரிகள் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.