சீனாவுக்கு கிடைத்த பதிலடி..! - உலகப்போரை நினைவுபடுத்திய பைடன்
சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்க மண்ணில் வெளிநாட்டு விமானம் ஒன்றை வீழ்த்துவது இதுவே முதன்முறை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் ஆறு கடல் மைல்களுக்கு அப்பால் நிலை கொண்டிருந்த பலூனை அமெரிக்க இராணுவ போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியது.
குறித்த உளவு பலூன் விவகாரத்தால் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த பலூனை வெற்றிகரமாக அகற்றி விட்டோம் எனவும், அதைச் செய்த விமானிகளைப் பாராட்ட விரும்புகிறேன் எனவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சுட்டுவீழ்த்தும் உத்தரவு
புதன்கிழமையே, சுட்டுவீழ்த்தும் உத்தரவை அதிபர் பைடன் அளித்ததாகவும், ஆனால் அந்த பலூன் கடல் மீது நகர்ந்து நிலை கொள்ளும் வரையில் இராணுவ நிர்வாகம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
1942 ஜூலை மாதம் தான் கடைசியாக அமெரிக்க மண்ணில் வெளிநாட்டு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தபட்டுள்ளது என கூறப்படுகிறது. ஜப்பானின் Mitsubishi A6M Zero போர் விமானம் ஒன்றை அலாஸ்கா பகுதியில் வைத்து அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
இதில் 19 வயது விமானி Tadayoshi Koga படுகாயமடைந்துள்ளதுடன், பலத்த காயங்கள் காரணமாக மரணமடைந்தார்.
6 ஜப்பானின் போர் விமானம்
இச்சம்பவத்திற்கும் ஓராண்டுக்கு முன்னர் Pearl Harbor தாக்குதலை முன்னெடுத்த 6 ஜப்பானின் போர் விமானங்களை அமெரிக்க விமானிகள் ஜார்ஜ் வெல்ச்(23), மற்றும் கென்னத் டெய்லர்(22) ஆகியோர் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.
இந்த வீரச்செயலை ஆதரித்து இருவருக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் வெல்ச் உரிய அனுமதியின்றி செயல்பட்டதாக கூறி அவருக்கு பதக்கமானது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்