சீனாவிற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா..! நகர மறுக்கும் சீனக் கப்பல்
இலங்கைக் கடலின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீன ஆராய்ச்சிக் கப்பல், அப்பகுதியில் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong 3 இன் பிரசன்னம் இலங்கை தொடர்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் புதிய இராஜதந்திர விவாதங்களைத் தூண்டியுள்ளன.
இலங்கைக் கடலில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் மீண்டும் மீண்டும் ஊடுருவி வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்ததுடன், அவை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதுகிறது.
ஆய்வுக் கப்பல்களுக்கு தடை
இதற்குப் பதிலடியாக, இலங்கை அரசாங்கம் தனது கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ளும் அனைத்து நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு ஓராண்டு தடை விதித்தது.
தடை விதிக்கப்பட்ட போதிலும், சீன அரசாங்கம் Xiang Yang Hong 3 என்ற ஆய்வுக் கப்பலை இலங்கைக் கடலில் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முறைப்படி அனுமதி கோரியது. கப்பல் அதன் சொந்த துறைமுகத்தில் இருந்து புறப்பட தயாரான போது தடை விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த மாதம் 16ம் திகதி சீனாவில் உள்ள சான்யா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சீன கப்பல், தனது போக்கை மாற்றிக்கொண்டது. நேரடியாக இலங்கைக்கு செல்லாமல், மாலைதீவு மீது பார்வையை வைத்தது.
இலங்கை கடல் எல்லை
இந்தநிலையில், நேற்றைய நிலவரப்படி, Xiang Yang Hong 3 இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் உள்ளதாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மேலும், சிக்கலை அதிகரிக்கும் வகையில், இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடந்த வாரம் கொழும்புக்கு வந்து கடற்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.இந்தியா இதை ஒரு மூலோபாய வெற்றியாக பார்க்கிறது.
சீன ஊடகங்கள் இந்தியாவின் கூற்றை எதிர்க்கின்றன, இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தம் ஒரு வெற்றி அல்ல, மாறாக கவலையை ஏற்படுத்துவதாக சீன தரப்புகள் குறிப்பிடுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |