ரஷ்யாவில் கூட்டு இராணுவப் பயிற்சி..! இந்தியா - சீனா இணைந்து பங்கேற்பு
ரஷ்யாவில் முன்னெடுக்கப்படவுள்ள கூட்டு இராணுவப் பயிற்சிகளில் இந்தியா, பெலரஸ், மொங்கோலியா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் தமது நாடும் இணைந்துகொள்ளவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக பல்வேறு சர்வதேச தடைகள் மற்றும் கண்டனங்களுக்கு ரஷ்யா உள்ளாகியுள்ள நிலையில், இந்தக் கூட்டுப் பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
பங்கேற்கும் நாடுகளின் இராணுவங்களுடனான நடைமுறை மற்றும் நட்புரீதியான ஒத்துழைப்பை ஆழமாக்குவது, மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் திறனை வலுப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை இலக்காக கொண்டு இந்தக் கூட்டுப் பயிற்சி முன்னெடுக்கப்படுவதாக சீனா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
முறுகல் நிலையில் சீனா - இந்தியா
இலங்கை வந்தடைந்துள்ள சீன யுவான் வாங் 5 கண்காணிப்பு கப்பலால் இந்திய மற்றும் சீனாவுக்கிடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்பொழுது ரஷ்யாவில் முன்னெடுக்கப்படவுள்ள கூட்டு இராணுவப் பயிற்சிகளில் இந்தியா மற்றும் சீனாவும் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.