இலங்கைக்குள் பிரவேசிக்க சீன ஆய்வுக்கப்பலுக்கு அனுமதி
சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷியான்-6 இலங்கைக்கு பிரவேசம் செய்வதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சீன ஆய்வுக்கப்பலான ஷியான்-06 இலங்கைக்கான விஜயத்தினை இம்மாதம் 25ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக அறிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தொடர்ச்சியாக கூறிவந்தது.
பிரவேசத்துக்கான அனுமதி
எனினும், பாதுகாப்பு அமைப்புச்சு குறித்த கப்பலின் பிரவேசத்துக்கான அனுமதி அளிக்கப்பட்டதாக ஆரம்பத்தில் கூறியிருந்தபோதும் பின்னர் அதனை இறுதி செய்கின்ற பணி வெளிவிவகார அமைச்சினுடையது என்று கூறியது.
இந்த நிலையில் கப்பலின் வருகை தொடர்பில் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எமது இந்தத் தீர்மானம் சீனாவுக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் நிகழ்ச்சி நிரலிடப்பட்ட பிற பணிகள் இருப்பதன் காரணமாகவே குறித்த கப்பலின் பிரவேசத்தினை பிற்போடுமாறு நாம் சீனாவைக் கோரியுள்ளோம்” என்றார்.