மாலைதீவில் அந்நிய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கும் சீனா!

Government of China China India Maldives
By Pavan Jan 12, 2024 08:12 AM GMT
Report

மாலைதீவின் உள்விவகாரங்களில் அந்நிய தலையீடுகளுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த சீனா, நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் மாலைதீவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது

சீனாவின் ஆதரவு பெற்ற முகமது மூயிஸ் கடந்த நவம்பர் மாதம் மாலைதீவின் புதிய அதிபராக பதவியேற்ற நிலையில், சீனாவுக்கு முதல்முறையாக உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இந்தப் பயணத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தையில் அவா் ஈடுபட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இரு நாடுகளுக்கு இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்தியாவுடனான மோதல்! மாலைதீவிற்கு 20 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா

இந்தியாவுடனான மோதல்! மாலைதீவிற்கு 20 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா

சீனா கடும் எதிா்ப்பு

இந்நிலையில், மாலைத்தீவு அதிபரின் சீனப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரு நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதில் தொடா்ந்து உறுதியான ஆதரவை வழங்க இருதரப்பும் ஒப்புக்கொண்டது. தேசிய இறையாண்மை, சுதந்திரம், கண்ணியம் மற்றும் மரியாதை நிலைநிறுத்தப்படுவதில் மாலைதீவுக்கு சீனா ஆதரவு அளிக்கும்.

அந்நாட்டுச் சூழலுக்கேற்ப வளா்ச்சிப் பாதையை ஆராய்வதில் மாலத்தீவுக்கு சீனா உதவி செய்யும். அந்நாட்டின் உள்விவகாரங்களில் அந்நிய தலையீடுகளை சீனா கடுமையாக எதிா்க்கும்.

மாலைதீவில் அந்நிய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கும் சீனா! | Chinese Tourist Arrival Indians Avoid Maldives

சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைத்து மதிப்பிடும் எந்தவொரு செயலையும் மாலைதீவு எதிா்க்கிறது.

தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளை எதிா்க்கும் மாலைதீவு, அந்தப் பிராந்தியத்துடன் எந்த வகையான ராஜீய உறவுகளையும் வளா்க்காது.

தேசிய மறு ஒருங்கிணைப்பை அடைய சீனா முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மாலைதீவு ஆதரிக்கிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை தவிர்த்து சீனாவின் உதவியை நாடிய மாலைதீவு

இந்தியாவை தவிர்த்து சீனாவின் உதவியை நாடிய மாலைதீவு

மாலைதீவு அமைச்சா்கள்

இந்த நிலையில், இந்தியா மற்றும் பிரதமா் மோடிக்கு எதிராக சமூக ஊடகத்தில் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் மாலைதீவு அமைச்சா்கள் மூவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மாலைதீவில் அந்நிய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கும் சீனா! | Chinese Tourist Arrival Indians Avoid Maldives

கடந்த அதிபா் தோ்தலில், இந்திய விரோதப்போக்கு பிரசாரத்தில் தற்போதைய ஆளும் கூட்டணி ஈடுபட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாலைதீவு அதிபரின் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026