சித்தங்கேணி இளைஞன் படுகொலை : காவல்துறையின் சித்திரவதை கூடம் கண்டுபிடிப்பு (காணொளி)
வட்டுக்கோட்டைகாவல்துறையினரால் சித்திரவதைக்குள்ளான நிலையில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சித்திரவதைக்குள்ளான மற்றைய இளைஞனை சட்டத்தரணிகளின் துணையுடன் கூட்டிச் சென்று உயிரிழந்த இளைஞனை காவல்துறையினர் சித்திரவதைக்குள்ளாக்கிய இடங்களில் விஞ்ஞான ரீதியான தடயவியல் சோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் சோதனை
இதன்படி வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் இன்றையதினம் (28) சோதனைகளை மேற்கொண்டனர்.
சித்திரவதை இடங்கள் காண்பிப்பு
இதன்போது உயிரிழந்த இளைஞனுடன் உடனிருந்த மூன்றாவது சாட்சியான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு உட்படுத்திய காவல் நிலையத்திற்குள் உள்ள இடங்களை காண்பித்தார்.
இவற்றினை பார்வையிட்டு பிராந்திய குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
வட்டுக்கோட்டை காவல்துறையினரால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு ,சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |