பிரான்சின் அடுத்த பிரதமர் தெரிவு: தீவிரம் காட்டும் ஜனாதிபதி மெக்ரோன்
பிரான்சின் (France) அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் (Emmanuel Macron) அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஜனாபதி இமானுவல் மெக்ரோன் இடதுசாரி, நடுநிலை மற்றும் வலதுசாரிக் கட்சித் தலைவர்களை நேற்று சந்தித்துள்ளார்.
அதன் போது, The NFP கட்சி, தனது கட்சியைச் சார்ந்த லூசி கஸ்டெட்ஸ் (Lucie Castets) என்ற என்பவரை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்துள்ளது.
விரைவில் தெரிவு
மேலும், பிரான்சின் அடுத்த பிரதமர் தெரிவிற்கு சேவியர் பெர்ட்ரான்ட், பெர்னார்ட் கேஸீவ்வ் (Xavier Bertrand, Bernard Cazeveuve) ஆகியோரின் பெயர்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்நாட்டு ஊடகங்கள் பாரீஸ் புறநகர் மேயரான கரீம் பௌம்ரானே (Karim Bouamrane) என்பவர் பிரதமராக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், பிரான்ஸ் நாட்டிற்கான பிரதர் விரைவில் தெரிவு செய்யப்படுவார் என குறிப்பிடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |