கிறிஸ்தவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கக்கூடாது : பிரபல வேதாகம ஆராய்ச்சியாளர் அதிரடி
கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கிக் கொண்டிருப்பது தவறு என்று பிரித்தானிய பைபிள் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் பிரபல வேதாகம ஆராய்ச்சியாளருமான வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய கால கட்டத்தில் காசா மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் நியாயமான ஒன்றல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் புரிந்து வரும் யுத்தங்களுக்காக கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்வது பைபிளுக்கும் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கும் விரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்தவகையில் இன்று இஸ்ரேலில் அராபியர்கள், இஸ்லாமியர்கள், பாலஸ்தீனியர்கள் இருக்கின்ற நிலையில் இவர்களை அந்தப் பிரதேசங்களை விட்டு துரத்த வேண்டும் என்று இஸ்ரேல் நினைப்பது வேத சத்தியத்திற்கே முரணானது என தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து ஜெபிப்பது வேத சத்தியத்தின் படி சரியான காரியமல்ல. ஒரு இன மக்கள் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும் ஒரு இன மக்கள் அழிய வேண்டும் என நினைப்பது எந்த விதமான அர்த்தமும் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை சுமந்து வருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |