சிறப்புற இடம்பெற்ற பாலன் பிறப்பு ஆராதனைகள் (படங்கள்)
இயேசு கிறிஸ்து பிறந்த நாளைக் கொண்டாடும் மகிமையான பாலன் பிறப்பு சற்று நேரத்திற்கு முன் உதயமானது.
நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு தேவாலயங்களிலும் நள்ளிரவில் ஆராதனைகள் நடத்தப்பட்டன.
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள், தெவத்தாவில் உள்ள அன்னையின் தேசிய பசிலிக்காவில் நடைபெற்ற ஆராதனைக்கு தலைமை தாங்கினார். கொவிட் 19 தடுப்பு வழிகாட்டுதல்களின்படி ஆராதனைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
மேலும், கொழும்பு நகரம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேவாலயங்களும் கிறிஸ்துமஸ் அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பெத்லகேமில் உள்ள தொழுவத்தில் இயேசு ஆண்டவர் பிறந்ததை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதத் தாக்குதலால் உருவாக்கப்பட்ட ஆபத்தான சூழ்நிலை மற்றும் 2020 இல் கொவிட் தொற்றுநோய் கடுமையாகப் பரவியதே இதற்குக் காரணம்.




