யாழில் மதுபோதையில் தேவாலயத்திற்குள் அடாவடி! உடைக்கப்பட்ட சொரூபங்கள்

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jul 26, 2025 02:25 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மாதா சிலையையே இந்த கும்பல் அடித்து உடைத்துள்ளார்கள்.

வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம்

வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம்


சேதப்படுத்தப்பட்ட மாதா சிலை

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) என்பிபி தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில் மதுபோதையில் தேவாலயத்திற்குள் அடாவடி! உடைக்கப்பட்ட சொரூபங்கள் | Church Vandalized In Jaffna

அதனைதொடர்ந்து,  இந்த கும்பல் மது போதையில், தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் முரண்பட்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

பின்னர் தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து , இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளனர்.

உயர் தர பரீட்சையில் சாதித்த கிழக்கு மாகாண மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

உயர் தர பரீட்சையில் சாதித்த கிழக்கு மாகாண மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்


கைது நடவடிக்கை

அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் என்பிபி தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யப்பட்டு  காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் மதுபோதையில் தேவாலயத்திற்குள் அடாவடி! உடைக்கப்பட்ட சொரூபங்கள் | Church Vandalized In Jaffna

கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நனவாகும் மக்களின் வாகன கனவு: மத்திய வங்கி சுற்றறிக்கையின் எதிரொலி

நனவாகும் மக்களின் வாகன கனவு: மத்திய வங்கி சுற்றறிக்கையின் எதிரொலி

 

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021