முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததால் அரசாங்கத்திற்கு 2.6 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு (CIABOC) ஆணைக்குழு நேற்று (26) இந்த தீர்மானத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

காற்றாலைக்கு எதிராக திரண்டவர்கள் மீது கொடூர தாக்குதல்: கால்களால் மிதிக்கப்பட்ட பெண்கள் - இறக்கப்பட்ட அதிரடிப்படையினர்
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விசாரணைகள் முடிவடைந்த பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு 2026 ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
