மகிந்தவுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Lankasri Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka
By Sathangani Apr 09, 2026 04:16 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான சத்தியக்கடதாசியை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (10) நிறைவடைவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த காலப்பகுதிக்குள் சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படத் தவறினால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்குரிய அவரது சொத்து விபரங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, இந்த ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

 ஊழல் எதிர்ப்புச் சட்டம்

கடந்த மாதம் 23ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம், 14 நாட்களுக்குள் சொத்து விபரங்கள், வருடாந்த செலவினங்கள், வருமான ஆதாரங்கள் ஆகிய விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதுவரை குறித்த சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படாத நிலையில், வழங்கப்பட்ட கால அவகாசத்தை எக்காரணம் கொண்டும் நீடிக்கப் போவதில்லை எனவும்  நாளைய தினத்திற்குள் (10) இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது இறுதி அறிவித்தல் எனவும் ஆணைக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மகிந்தவுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Ciaboc Orders Mahinda To Submit Asset Details

அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படத் தவறினால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (Anti-Corruption Act) விதிமுறைகளுக்கு இணங்க, அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சட்ட ரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுவது விசாரணைகளின் வெளிப்படைத்தன்மைக்கு அவசியமானது என ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை

தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை

மீண்டும் உயரப்போகும் மின்கட்டணம்

மீண்டும் உயரப்போகும் மின்கட்டணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016