நாடாளுமன்ற இணையத்தள சர்ச்சை: விசாரணையை தொடர்ந்த சிஐடி
நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக தலைப்பில் பிழையான விபரங்கள் பட்டியலிடப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிஐடி குழு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நாடாளுமன்றத்திற்குச் சென்றது.
அதன்போது, இணையத்தளத்தில் தகவல்களை உள்ளிடுவதற்கு அடிப்படையாக பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களும் அதிகாரிகளால் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிழையான தரவுகள்
இந்த நிலையில், கடந்த வாரம் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சிஐடியில் தனது பெயர் ‘டாக்டர்’ என்ற பட்டத்துடன் பட்டியலிடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்படி, நீதியமைச்சர், சட்டத்தரணி, ஹர்ஷன நாணயக்காரவின் தகுதிகள் தொடர்பான விவரங்கள், நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிழையான தரவுகளை தவறானவை என இலங்கை நாடாளுமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |