அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம்: சந்தேகநபர்களை தேடி சிஐடி வலைவீச்சு
கடந்த சில நாட்களாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராகவும் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அவதூறு பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பதாக கண்டறியப்பட்ட ஒரு வலைத்தளம் மற்றும் யூடியூப் சனல் குறித்து விசாரணைகளை நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றுக்கு பணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாகவே முறைப்பாடு
குறித்த அவதூறு பிரச்சாரங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க ஆதரவாளர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி முன்னதாகவே முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வாறான பிரச்சாரங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பல அமைச்சரவை அமைச்சர்களின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
