முத்தையன்கட்டு இராணுவ முகாம் விவகாரத்தில் சிக்கிய பகீர் காணொளி
தமிழர் பிரதேசத்தில் அண்மைய நாட்களாக முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம்தான் பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகியுள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த (07.08.2025) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர், முத்தையன்கட்டு குளத்திலிருந்து கடந்த (09.08.2025) சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் பாரிய அதிர்ச்சியையும் அத்தோடு தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் அடக்குமுறையும் பிரதிபலிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, தமிழ் தலைமைகள் உட்பட மக்களும் இது குறித்து கேள்வியெழுப்பியதுடன் சம்பவம் தொடர்பில் கண்டன அறிக்கைகளும் மற்றும் முறையான விசாரணைகள் குறித்த கோரிக்கைகளும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், சம்பவத்தின் விரிவான பின்னணி, சம்பவத்தில் அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை, தொடரப்பட்டுள்ள விசாரணைகளின் அடுத்த கட்டம் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
